மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் புறவழிச் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது . இந்த கடையில் திட்டை பகுதியை சேர்ந்த காமராஜ் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கடையில் சீர்காழி அருகே மாதானம் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த பாரத் (32) என்பவர் மதுபான பானம் வாங்க சென்றபோது அவரிடம் பாட்டியலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கடை ஊழியருக்கும் மதுபானம் வாங்க சென்ற பாரத் என்பவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சீர்காழி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர் மயிலாடுதுறை கூறை நாடு பகுதியை சேர்ந்த பாபு மற்றும் சூப்பர்வைசர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு வரை கட்டணம் உயர்வு – பயணிகள் கடும் அவதி!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!