கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (29), இருவரும் தொழிலாளர்கள். இதில் பாலகிருஷ்ணனின் மகன், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆனந்தின் மனைவியுடன் பழக்கம் வைத்ததில், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையே பாலகிருஷ்ணனின் மகன், ஆனந்தின் மனைவியை வெளியூருக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, பாலகிருஷ்ணணுக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் மதுபோதையில் வந்த ஆனந்தன், உன்னால்தான் என் மனைவியை, உன் மகன் அழைத்து சென்றார் என பாலகிருஷ்ணனுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த ஆனந்தன், பாலகிருஷ்ணனை பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்பட்டது. தனது மூத்த மகள் வீட்டிற்கு சென்று அவர் தன்னை ஆனந்த் அடித்து விட்டதாகவும், உடல் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக அவரை மகள், ஆட்டோ பிடித்து கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.

More Stories
“தங்கம் சவரனுக்கு ரூ.2 லட்சத்தை தொடும்?”.. பேரதிர்ச்சி தகவல்…
ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது…
ரூ.100 கோடி மோசடி செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது…