சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் தாமு, தனது பிறந்த நாள் விழாவில், வாளால் கேக் வெட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட தாமு, வெற்றி பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுனர் என்ற அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எளிய மக்களின் ஆதரவை பெற்ற இவர், நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது, தொண்டர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் எம்எல்ஏ தாமு, சுமார் இரண்டடி நீளமுள்ள வாளைக் கொண்டு கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது

More Stories
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்