May 5, 2026

தேர்தல் முடிவுகள் 2026 … ஒரு பெண் எம்எல்ஏ கூட இல்லாமல் அமைகிறது புதிய அரசு !

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் இம்முறை எந்த பெண் வேட்பாளரும் வெற்றி பெறாததால், பெண்கள் இல்லாத சட்டப்பேரவை உருவாகியுள்ளது. புதுச்சேரி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்போதுமே குறைவாகவே இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதான நிகழ்வாக இருந்த நிலையில், சில தேர்தல்களில் மட்டுமே பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

புதுச்சேரி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எப்போதுமே குறைவாகவே இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதான நிகழ்வாக இருந்த நிலையில், சில தேர்தல்களில் மட்டுமே பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திர பிரியங்கா வெற்றி பெற்று அமைச்சரானார். ஆனால் பின்னர் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தன. என்.ஆர். காங்கிரஸ் கட்சி திருபுவனை தொகுதியில் கோபிகாவையும், நெடுங்காடு தொகுதியில் சந்திர பிரியங்கா அவர்களையும் போட்டியிடச் செய்தது

தேபோல் காங்கிரஸ் கட்சி அரியாங்குப்பம் தொகுதியில் விஜயலட்சுமிக்கு வாய்ப்பு அளித்தது.பெண்கள் வேட்பாளர்களுக்கு முக்கிய கட்சிகள் வாய்ப்பு வழங்கியிருந்த போதிலும், இம்முறை அனைத்து பெண் வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால், புதியதாக அமைவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரே ஒரு பெண் உறுப்பினரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றாலும், சட்டப்பேரவையில் அவர்கள் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது.பெண்கள் அரசியலில் முன்னேற அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. வருங்கால தேர்தல்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சிகள் தேவைப்படுகிறது.