தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜோதிடத்தை வைத்து கேன்சரை குணப்படுத்தலாம் என்று சொன்ன தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் வெற்றி பெற்ற நிலையில் அவிநாசியில் திமுக நிறுத்திய 26 வயதான பெண் மருத்துவர் கோகிலாமணி தோல்வியை தழுவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிவு சார்ந்த மாநிலமாக பார்க்கப்படும் தமிழகத்தில் எப்போதுமே அறிவியலுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள். ஆனால் தற்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் 37 வயதான கனிமொழி சந்தோஷ் என்ற பெண் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.l
சுயதொழில் செய்து வருவதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள கனிமொழி சந்தோஷ், சொத்து மதிப்பு சுமார் 25 கோடி 50 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்றில் ஜோதிடத்தை வைத்து புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி உள்ள வேட்பாளருக்கு விஜய் எப்படி வாய்ப்பு வழங்கினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தல் முடிவில் அவர் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். ஜோதிடம் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருந்த கனிமொழி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவினாசியில் திமுக நிறுத்திய இளம் வேட்பாளரான பெண் மருத்துவர் கோகில மணி தோல்வியை தழுவினார்.
ஜோதிடம் மூலம் மருத்துவம் செய்யும் ஒருவரை வெற்றி பெற வைத்து விட்டு இளம் பெண் மருத்துவரை தோற்கடித்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை போல் லெப்ட் பாண்டி, கில்லி குமார், மரிய வில்சன் போன்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என வேதனையை தெரிவித்துள்ளனர்.

More Stories
லைவ் நிகழ்ச்சியிலேயே குத்தாட்டம் போட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ பிரதீப் குப்தா!
டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ தான்! அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்!
“ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீளும்” – எடப்பாடி பழனிசாமி…