தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. தேர்தல் முடிவுகளின் போக்கு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான சூழலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை அடுத்த மாதம் தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி தற்போது கேள்வி பெண்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில், அக்கட்சி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தனது வாக்குறுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. 2023 செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் 1.30 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2026 தேர்தல் நடத்தை நெறிகள் வருவதற்கு முன்பாக சுமார் 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ. 5000 வரவுவைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. அதேபோல், அதிமுக மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போதுள்ள அரசியல் சூழலில், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தை தாமதப்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தவே வாய்ப்புகள் அதிகம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதிய அரசு பதவியேற்றவுடன், தங்களின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. எனவே, அடுத்த மாதம் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றும், மாறாக புதிய ஆட்சியின் கீழ் அந்தத் தொகை உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில், அவர்கள் வாக்குறுதி அளித்த ரூ.2,500 வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

More Stories
லைவ் நிகழ்ச்சியிலேயே குத்தாட்டம் போட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ பிரதீப் குப்தா!
டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ தான்! அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்!
“ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீளும்” – எடப்பாடி பழனிசாமி…