சென்னை: வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம்பெண்…

வீட்​டிலிருந்த 129 பவுன் தங்க நகைகளை சிறுகச் சிறுக திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்​ணால் மதுர​வாயலில் பரபரப்பு ஏற்​பட்​டது. மதுர​வாயல் ஏரிக்​கரை லட்​சுமி நகரைச் சேர்ந்த தமிழ்ச்​செல்​வன் சமீபத்​தில் இறந்​து​விட்​டார்.

இவருக்கு மனை​வி, 3 பெண் பிள்​ளை​கள் உள்​ளனர். இவர்​களுக்கு தமிழ்ச்​செல்​வனின் சகோ​தரர் பன்​னீர்​செல்​வன் வேண்​டிய உதவி​களை செய்து வந்​தார். மேலும் தனது 22 பவுன்நகைகளை அண்ணியிடம் கொடுத்துவைத்திருந்தார்.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு நகைகளை சரி​பார்த்​த​போது, பன்​னீர்​செல்​வனின் நகை மற்​றும் அண்​ணி​யின் 107 பவுன் என மொத்​தம் 129 பவுன் தங்க நகைகள் மாய​மானதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​தார்.இதுகுறித்து மதுர​வாயல் காவல் நிலை​யத்​தில் பன்​னீர்​செல்​வன் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

போலீ​ஸாரின் விசா​ரணை​யில் தமிழ்ச்​செல்​வனின் 3-வது மகள், அரு​கில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை பார்த்​தபோது​ கார்த்​திக் (21) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டு, அது காதலாக மாறி ​உள்​ளது. அப்​போது கார்த்​திக் தனது தந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லை என்று கூறியதால், அந்தப் பெண் வீட்​டில் யாருக்​கும் தெரி​யாமல் சிறுகச் சிறுக அனைத்து நகைகளை​யும் பணத்​தை​யும் திருடி கார்த்​திக்​கிடம் கொடுத்​துள்​ளார்.

அந்த நகைகளை கார்த்​திக் தனது நண்​பர்​களு​டன் சேர்ந்து பல்​வேறு இடங்​களில் விற்​றுள்​ளார். விலை உயர்ந்த செல்​போன், பைக், கார் வாங்கி உல்​லாச​மாக வாழ்ந்துள்ளார். இதையடுத்து, கார்த்​திக், அவரது நண்​பர்​களான ஆவடி வீராபுரத்​தைச் சேர்ந்த குமரகோ​பால் (20), ஆவடி பிர​காஷ் (22), ரமேஷ் (47) மற்​றும் மாத்​தூர் சூர்யா (28) ஆகிய 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்களிட​மிருந்து 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், 1 செல்​போன், 1 பைக் மற்​றும் 1 கார் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. காதலனிடம் நகைகளை கொடுத்த பெண்​ணிட​மும் போலீ​ஸார் தொடர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.