September 10, 2026

‘விஜய் வாய் துடுக்கா பேசக்கூடாது’…இயக்குநர் பாரதி கண்ணன் அட்வைஸ்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாய் துடுக்காக பேசக்கூடாது என்று திரைப்பட இயக்குநர் பாரதி கண்ணன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இயக்குநர் பாரதி கண்ணன். முதலில் திரைப்பட விநியோகஸ்தராக வாழ்க்கையை துவங்கிய பாரதி கண்ணன், பின்னர் உதவி இயக்குநராக பல ஆண்டுகளாக பலரிடம் பணியாற்றினார். இதன் பின் 1996-ம் ஆண்டு ‘அருவா வேலு’ என்ற படத்தை இயக்கினார். இதன் பின் ‘கண்ணத்தாள்’, ‘திருநெல்வேலி’, ‘ஸ்ரீராஜ ராஜேஸ்வரி’, ‘ஸ்ரீபண்ணாரி அம்மன்’, ‘வயசு பசங்க’, ‘கரகாட்டக்காரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

தனது திரையுலக அனுபவங்களை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் கார்த்திக் குறித்து சுவாரஸ்யமான பல விஷயங்களை பாரதி கண்ணன் கூறினார். அத்துடன் நடிகர் கார்த்திக் போல மிமிக்ரியும் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் கார்த்திக் ரசிகர்களின் மிரட்டலுக்கு பாரதி கண்ணன் உள்ளானார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் பேசிய மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இயக்குநர் பாரதி கண்ணன், “விஜய்க்கு நல்ல பேச்சுத்திறமை உள்ளது. ஆனால், அவரிடம் உள்ள குறை என்றால் அவரது கட்சியை கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அவரது அணியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் விஜய் தான். கேட்ச் பிடிப்பது அவர் தான். அவர் தான் கட்சியின் எல்லாமே. அவருக்கு அடுத்து அந்த கட்சியின் பேட்ஸ்மேன் என்று யாருமில்லை. எல்லாருமே நீங்க நல்ல ஆடுங்கண்ணே… நீங்க ஜெயிச்சிருவீங்க… நாங்க உங்கள் கூட இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

You may have missed