விஜய்யையும்; எடப்பாடி பழனிசாமியையும் ஒரே மேடையில் பேச்சால் விளாசிய திருமாவளவன்…!

“செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “இங்கு ஒரு நடிகர் இருக்கிறார். கட்சி தொடங்கியதும் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பதவிக்காக மட்டுமே வந்திருக்கிறார்”. என்று குற்றம்சாட்டினார்.

“விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைத்திருந்தால் எத்தனையோ கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் ஏன் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்? அதுதான் கொள்கை பிடிப்பு. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதிக சீட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்து, கொள்கை பிடிப்புக்காக நின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

“தப்பித்தவறி ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி முதல்வரானால், அவரின் பதவி இரண்டு மாதங்களுக்குள் பறிக்கப்படும். அதற்கு பதிலாக எச். ராஜாவையோ அல்லது அண்ணாமலையையோ அல்லது பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனையோ முதல்வராக பா.ஜ.க. தேர்வு செய்யும். அந்த நிலைக்கு பா.ஜ.க. செல்லும், என்றும் திருமாவளவன்
கருத்து தெரிவித்தார்.

Related Posts

சிவகாசி களம்: ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் ஆதரவா? அதிருப்தியா? – ஓர் அலசல்!

சிவகாசி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழகமே உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி. இங்கு அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மீண்டும் தனது கோட்டையைத் தக்கவைக்க தீவிரமாகப் போராடி…

Continue reading
தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி! – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

திருவள்ளூரில் நடைபெறற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆவடி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். நோ என்ட்ரி..! அப்போது அவர் கூறியதாவது,…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *