பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும் இந்தியா கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றி வருகின்றன.

பிஹார் சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. இங்குள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.

இது முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகமாகும். குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவானது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன. இந்த நிலையில், வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 14) காலை 8 மணியளவில் தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணி பெறத் துவங்கியது. காலை 9.40 மணி நிலவரம் தேசிய ஜனநாயக கூட்டணி – 162, இந்தியா கூட்டணி – 76, ஜன் சுராஜ் 3, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது.ஜிலேடு, லட்டு, சாட்டு பராத்தா மற்றும் பைங்கன் சோக்கா உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகள் தயாராகி வருகிறது. இதே போல மொகாமாவில் உள்ள ஆர்ஜேடி தலைவர் வீணா தேவியின் வீட்டில் லிட்டி சோக்கா, ரஸ்குல்லா உள்ளிட்ட பொருட்கள் தயாராகி வருகின்றன.