September 10, 2026

பாடலாசிரியர் சினேகனின் தந்தை மரணம்

திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 102.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கவிஞரான சினேகன்.2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள புது காரியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளராக சினேகன் உள்ளார். இவரது தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

அவரின் இறுதிச்சடங்கு நாளை (அக்.28) காலை 11:00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புது காரியப்பட்டியில் நடைபெற இருப்பதாக சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவிஞர் சினேகனுக்கு திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.