September 10, 2026

ஒரே நேரத்தில் 15 இடங்களில் ஈ.டி ரெய்டு…சென்னையில் பரபரப்பு!

சென்னையில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் சேட் என்ற தங்க நகை வியாபாரியின் வீடு, கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள கலைச்செல்வன் என்பவரது வீடு, அம்பத்தூர் திருவேங்கடா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரகாஷ் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed