September 10, 2026

பல தலைமுறைகளைக் கடந்த நடிப்பாற்றல்… நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் வாழ்த்துசெய்தி வெளியிட்டுள்ளார். அதில்,” ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது. பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

You may have missed