September 10, 2026

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு:காங்கிரஸ் அறிவிப்பு

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. இந்த குழுவில் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில்,” தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed