September 10, 2026

உயர்நீதிமன்ற வாசலில் வெடித்த துப்பாக்கி- உயிரிழந்த பாதுகாப்பு படை காவலர்!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு சிறப்பு படை காவலரான மகாலிங்கம் நேற்றிரவு பணியில் இருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மகாலிங்கம், திடீரென பாதுகாப்பு பணிக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதனால் பதறிப்போன மற்ற காவலர்கள், மகாலிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டது தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாலிங்கத்தின் தற்கொலை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

You may have missed