September 10, 2026

தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தவெக – சுற்றுப்பயண திட்டத்தை வெளியிட்டார் புஸ்ஸி ஆனந்த்

பொதுமக்களிடையே கருத்துகளைக் கேட்கும் சுற்றுப் பயணத் திட்டம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக் குழு செயல்பாடுகள் குறித்து தவெக அறிவித்துள்ளது.

தவெக-வின் திட்டங்கள்

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, மக்களுக்கான அறிக்கை மக்களிடம் இருந்தே உருவாக வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காகக் கூடுதலான தரவுகளைப் பெறவும் பொதுமக்களின் தேவைகள் குறித்து முழு விவரங்களைச் சேகரிக்கவும் தேர்தல் அறிக்கைக் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப் பயண விவரம்:

  • தெற்கு மண்டலம் : பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி.
கூட்டம் நடைபெறும் இடம் : மதுரை

  • கிழக்கு & தென் கிழக்குக் கடற்கரை மண்டலம், பிப்ரவரி 4, புதன்கிழமை

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை (இணைப்பு), ராமநாதபுரம், தூத்துக்குடி.
கூட்டம் நடக்கும் இடம்: கடலூர்

  • மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்) பிப்ரவரி 7, சனிக்கிழமை

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி.

கூட்டம் நடைபெறும் இடம்: கோவை

  • மத்திய மண்டலம் (காவிரி டெல்டா & மைய மாவட்டங்கள்), பிப்ரவரி 9, திங்கள்கிழமை
  • திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
    கூட்டம் நடைபெறும் இடம்: திருச்சி
  • வடக்கு மண்டலம் (சென்னை & சுற்றியுள்ள மாவட்டங்கள்), பிப்ரவரி 11, புதன்கிழமை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை.
கூட்டம் நடைபெறும் இடம்: சென்னை

You may have missed