September 10, 2026

முதல்வர் விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் கைது…

தமிழக முதல்வரை விமர் சித்து சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட ஜேம்ஸ் ராஜா (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜானகி ராமன் மகன் ஜேம்ஸ் ராஜா. பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியவர்.

தற்போது பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானம் எதிரேயுள்ள புதுப்பேட்டை தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸடாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பாளையங் கோட்டை சப் -இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.

You may have missed