லடாக்கின் டாங்ஸ்டே மலைப்பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று எதிர்பாராத விதமாக மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ அதிகாரிகள் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, மரண விளிம்பிலும் மனம் தளராமல் கூலாக எடுத்து கொண்ட ‘செல்பி’ போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் அருகே லடாக் மலை பிரதேசமாக உள்ளது. இங்கு அடிக்கடி ராணுவ அதிகாரிகள் ராணுவ ஹெலிகாப்டரில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இது மிகவும் மோசமான இடமாகும். அடிக்கடி மோசமான காலநிலை உருவாகும். இதனால் அடிக்கடி ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்து வீரர்கள் மரணிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் லே மலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் இருந்து உயிர் பிழைத்த 3 ராணுவ அதிகாரிகள் கூலாக எடுத்த ‘செல்பி’ போட்டோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: ஆபத்து நிறைந்த லடாக்கின் மலை பிரதேசத்தில் கடந்த 20ம் தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சீட்டா ரக ஹெலிகாப்டரில் மொத்தம் 3 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா (3வது Infantry Division தளபதி), உடன் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் மேஜர் ஆகியோர் பயணித்தனர்.
இதில் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் மேஜர் ஆகியோர் ஹெலிகாப்டரை இயக்கினர். பயணி போல் மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா உடனிருந்தார். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலை பிரதேசத்தில் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டர் சுக்கு சுக்காக நொறுங்கியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக 3 ராணுவ அதிகாரிகளும் உயிர் தப்பினர். அவர்கள் லேசாக காயங்கள் மட்டும் அடைந்தனர். இந்த விபத்து கடந்த 20ம் தேதி நடந்தது. விபத்து குறித்த அறிவிப்பு இன்று காலையில் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

More Stories
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…
கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: