Omegle போன்ற ஆன்லைன் தளங்களில் நடைபெறும் ரேண்டம் வீடியோ கால் உரையாடல்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன. வெளிநாட்டு இளைஞருடன் இந்தியப் பெண் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் இடம்பெற்ற பதில் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
அண்மைக் காலமாக முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் வீடியோ காலில் பேசி, அந்த உரையாடல்களை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடைமுறை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியூஸ்களை ஈர்க்கும் நோக்கில் சில கிரியேட்டர்கள் வித்தியாசமான கேள்விகள், சவால்கள் மற்றும் உரையாடல்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவ்வகையில் வெளியான Omegle வீடியோவில், வெளிநாட்டு இளைஞர் ஒருவர் இந்தியப் பெண்ணிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அவர் தயக்கமின்றி 20 பேர் என பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பதிலே தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
டியோ வைரலானதைத் தொடர்ந்து வைரல் வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கை ஒவ்வொருவரின் விருப்பம் என்றாலும், அதுபோன்ற விஷயங்களை பொதுவெளியில் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஒருவரின் தனிப்பட்ட தேர்வுகளை வைத்து விமர்சிக்கக் கூடாது என மற்றொரு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சாதாரண ரேண்டம் வீடியோ கால் உரையாடலாக தொடங்கிய இந்த பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தனியுரிமை, இணைய கலாச்சாரம் மற்றும் கன்டென்ட் உருவாக்கத்தின் எல்லைகள் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.

More Stories
மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்க எதிர்ப்பு; ஆவடி தவெக எம்எல்ஏ ஆபீஸ் முற்றுகை:
அரியலூர்: பெண் மீது கொடூர தாக்குதல் தவெக பிரமுகர் மீது வழக்கு…
சென்னை: வேலையை விட்டுவிட்டு பானி பூரி கடை தொடங்கிய ஐடி ஊழியர்கள்..