தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் விவசாயி அந்தோணி ராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி சிவகிரி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த போது, புகாரினை பெற்றுக்கொள்ளாமல் காவலர்கள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான சூழலில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களில் உயிரிழந்தார். இறந்தவரின் மகன் இசக்கி அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் முரளிதரன், காவல்நிலைய எழுத்தாளர் கனகராஜ், காவலர் முத்துக்கண்ணன் ஆகிய காவலர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்கொலைக்கு தூண்டியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?