November 2, 2026

மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் வி. லோகநாயகிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தற்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் வி. லோகநாயகி, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பதவியின் முழு பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed