ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காகப் பண்டிகைக்குப் பல மாதங்களுக்கு முன்பே நூல் கொள்முதல் மற்றும் நெசவுப் பணிகளைத் தொடங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அந்த வகையில், 2027 பொங்கல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மொத்தம் ₹642 கோடி நிதி கோரப்பட்டிருந்தது. அதில், தற்போது முதற்கட்டமாக நூல் கொள்முதல் செய்வதற்கும், நெசவாளர்களுக்கு உற்பத்தி முன்பணம் (Advance) வழங்குவதற்கும் ₹300 கோடியைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒா்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2027 பொங்கல் பண்டிகைக்காக மொத்தம் 2.27 கோடி சேலைகளும், 2.25 கோடி வேட்டைகளும் உற்பத்தி செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் தகுதியான நெசவாளர்களைக் கொண்டு நெய்யப்பட உள்ளன
அரசு தற்போது நிதியை முன்கூட்டியே ஒதுக்கியுள்ளதால், நூல் கொள்முதல் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு, வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் உரிய நேரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!