தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமம் நெட்டூர். இங்குள்ள சர்ச் தெருவில் திருமண வீட்டில் நேற்று விருந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
அப்போது, முகமூடி அணிந்து வந்த சிலர், திடீரென திருமண வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சலிட்டனர்.
இதில் ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆலங்குளம்- சங்கரன்கோவில் சாலையில் நெட்டூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 4 பேரை பிடித்து கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…