பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது: அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.…
அதிகாலையில் சோகம்… ஐயப்ப பக்தர்கள் மீது கார் மோதி 5 பேர் பலி!
கீழக்கரை அருகே திமுக நகர் மன்ற தலைவரின் கார், ஐயப்ப பக்தர்களின் கார் மீது மோதி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய…
துடிக்க துடிக்க 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற சைக்கோ கில்லர்!
சொந்த மகள் உள்ளிட்ட நான்கு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சைக்கோ கொலையாளியான பெண்ணை போலீஸார் கைது செய்த சம்பவம் ஹரியாணாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள நெளலதா கிராமத்தில் டிசம்பர் 1-ம் தேதி…
ஒரே நாளில் 1,000 விமானங்களை ரத்து செய்த இண்டிகோ- காரணம் என்ன?
ஒரே நாளில் இண்டிகோவின் 1,000 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாலும், பிற விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாலும் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது.…
மதுரையை இன்னொரு அயோத்தியாக மாற்ற சூழ்ச்சி: சீமான் எச்சரிக்கை!
மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இன்னொரு அயோத்தி இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட…
இந்து மரபுகளை கேலி செய்வது சிலருக்கு பழக்கமாகி விட்டது: பவன் கல்யாண் குற்றச்சாட்டு
ஒரு புனித நாளைக் கொண்டாடுவதை வேறொரு நேரத்திற்கு மாற்ற முடியுமா?ஆனாலும், அந்த புனிதமான கார்த்திகை தீப தருணம் திருடப்பட்டுள்ளது என்று ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக…
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
வானில் பறந்து கொண்டிருந்த போது வந்த வெடிகுண்டு மிரட்டலால் எமிரேட்ஸ் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு எமிரேட்ஸ் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அந்த. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு…
எதிரிகளை வீழ்த்தி ஆட்சியை அமைப்போம்: ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் சபதம்
தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர்…
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: 2 நாட்களில் விசாரணை!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இரண்டு நாட்களில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம்…
‘மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…….. அரசியலா?’: மு.க.ஸ்டாலின் கேள்வி
மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி 2 நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற…






