தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 2020 ஆம் ஆண்டுக்கு முன் 2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது கூறும் குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால், விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

More Stories
மு.க. ஸ்டாலின் தேசத்திற்காகப் போராடும் தலைவர்: அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்
இலங்கையில் தமிழர்களுக்காக இந்திய அரசு சார்பில் புதிய வீடுகள்….
அன்புமணி தலைமையிலான ‘துரோக கும்பலை 18 தொகுதிகளிலும் வீழ்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ் ஆவேசம்