மலேசியாவில் திடீரென தீ விபத்து… ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதம்!

சபா மாநிலம், சந்தக்கான் பட்டு சாப்பி (Batu Sapi) பகுதியில் உள்ள கம்போங் பஹாகியா கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 19) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் மரத்தூண்களால் அமைக்கப்பட்டிருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உடமைகளைக் கூட எடுக்க முடியாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர். நல்ல வேலையாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.