தீவிர சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை (20ஆம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நாளை (20ஆம் தேதி) நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்