ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமையா? அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லக்னோ: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட இரட்டை குடியுரிமை வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கர்நாடகாவைச் சேர்ந்த விக்னேஷ் சிஷிர் என்பவர், ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதாகக் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்தி 2003-ல் லண்டனில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் தன்னை ‘பிரிட்டிஷ் குடிமகன்’ என்று குறிப்பிட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு:
ஏற்கனவே இந்த மனுவை லக்னோ சிறப்பு நீதிமன்றம் (MP/MLA Court) தள்ளுபடி செய்திருந்த நிலையில், மனுதாரர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டார்.
- மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்: குடியுரிமை தொடர்பான விவகாரம் என்பதால், மாநில அரசு தேவைப்பட்டால் மத்திய ஏஜென்சிகளின் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் பரபரப்பு:
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து ஏற்கனவே பலமுறை சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது நீதிமன்றமே இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இது பாஜாகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

More Stories
பிரசாரத்திற்காக சென்னை வந்த ராகுல் காந்தி
தாமரை கோலமிட்டு நடிகை கஸ்தூரி பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு…
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி!