பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் : தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

தவெக கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தவெக கட்சியின் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. தவெக வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட போது பிரகாசம் என்கிற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை

“அப்போது மகளிர் அணி நிர்வாகி ஒருவரை பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து த.வெ.க தலைமைக்கு அந்த பெண் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்

இதையடுத்து, கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வருகை தந்து பாலியல் சீண்டல் அளித்த தவெக வேட்பாளர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார். அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

இந்த நிலையில், தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் தவெக வேட்பாளர் பிரகாசம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாஅரித்த சென்னை ஐகோர்ட்டு, பிரகாசத்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Related Posts

பாலியல் புகாரில் சிறையில் இருக்கும் மலையாள இயக்குனருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்

மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது இளம் நடிகையிடம் பாலியல் அத்துமீறல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜனவரி 9-ந்தேதி கொச்சி துறைமுகம் பகுதியில் தனது படத்தில் நடிக்க வந்த நடிகையிடம் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில்…

சசிகலா ஆவேசம்: துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கை!

சென்னை: அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், அவரின் “துரோக அரசியல்” குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ​துரோகம் ஒருபோதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *