தமிழகத்தை 234 தொகுதிகளிலும் தவெக கட்சி தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தனித்துத் தான் போட்டியே
சென்னை கொளத்தூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, “தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது என்றார்.
பல ஆஃபர்களை தவெக தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள் என்றும் ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார் என்பதை குறிபிட்டு பேசினார்.

90 சீட்’கள் – 2.5 ஆண்டுகள் முதல்வர்
90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை (2.5) ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்.” என்று உறுதிப்பட ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.






