திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும்; 1 நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் இன்று (04-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள

“காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் 28 (இருபத்தெட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும்; நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு” செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சர்ச்சையாக; மோதலாக இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.






