தஞ்சாவூர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு தனது வாகனத்தில் சென்ற தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை தொடர்ந்த அவரது ரசிகைகளான கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தில் சிக்கிய இளைஞர், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆவார். படுகாயமடைந்த அந்த மாணவர்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், “இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கல்லூரிக்கு செல்வதாகவே கூறிவிட்டு தன் மகன் விஜய்யை பார்க்க சென்றதாக” படுகாயமடைந்த
விக்னேஷின் தந்தை கண்ணீர்மல்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் தனது பயணத்தின் போது தனது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், இளைஞர்கள் விஜய் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் அவரின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்






