2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்று முறைப்படி திமுக தொடங்கியுள்ளன.
இதில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

தொகுதிப் பங்கீடு –
IUML-ன் கோரிக்கை:
கடந்த 2021 தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.மு.லீக் இந்த முறை 5 தொகுதிகளை திமுகவிடம் கோரியது.
திமுகவின் நிலைப்பாடு:
திமுக தரப்பில், கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டியிருப்பதால், பழைய கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
2 தொகுதிகள் சர்ச்சை:
பேச்சுவார்த்தையின் போது, கடந்த முறை ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் IUML வெற்றி பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய திமுக குழு, இந்த முறை 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் மயக்கம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த IUML தலைவர் கே.எம். காதர் மொகிதீன், திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்தார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னம் குறித்த தகவல்:
இ.யூ.மு.லீக் எப்போதும் போல தங்களது சொந்த சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும், திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
என்ன சொல்கிறது திமுக..?
திமுகவின் டி.ஆர். பாலு தலைமையிலான குழு, மற்ற கூட்டணிக் கட்சிகளுடனும் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக) ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்தகட்டமாக மீண்டும் IUML-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, 2 தொகுதிகள் என்பது இன்னும் இறுதி முடிவு அல்ல, பேச்சுவார்த்தை தொடர்கிறது.






