September 10, 2026

இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்த ‘தங்கம் – வெள்ளி’ விலைகள் : மகிழ்ச்சியில் மக்கள்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 முறை தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து உள்ளதால் தங்க நகைகள் வாங்க விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 7,600 ரூபாய் குறைந்து பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

குறைந்தது தங்கம் விலை

அதன்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.2,800 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.15,850க்கு விற்பனையாகிறது. காலையில் தங்கம் விலை ஒரு கிராமிற்கு ரூ.600 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.350 குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

“வெள்ளியைப் பொறுத்தவரை சென்னையில் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.4,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும கிராமுக்கு வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது”.

You may have missed