மதுரையில் உடல் எடையை குறைப்பதற்காக கல்லூரி மாணவி ஒருவர் வெண்காரம் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி கலையரசி. இவர் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்றுள்ளார். ‘யூடியூ சேனல் ஒன்றில் வெளியான ஆலோசனையை பின்பற்றி, உடல் பருமனை குறைக்க அவர் ‘வெங்காரம்’ சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு ரத்தப்போக்குடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Youtube சேனல்களை பார்த்து யாரும் மருந்து பொருட்களை சாப்பிட வேண்டாம் என்று உயிரிழந்த மாணவி தந்து உருக்கமாக அறிவுறுத்தியுள்ளார்.
வெண்காரம் என்பது என்ன?
வெண்காரம் என்பது பொதுவாக வீடுகளில் சலவை செய்யவும், கறைகளை நீக்கவும், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள்.
இது சோடியம் போரேட் என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவத்தில் (சித்த மருத்துவம்) இது சுத்திகரிக்கப்பட்ட பிறகு மிகச் சிறிய அளவில் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
ஆனால், இதை நேரடியாகவோ அல்லது அதிக அளவிலோ உட்கொண்டால் அது கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
உயிரிழப்பிற்கு என்ன காரணம்?
உள் உறுப்புகள் பாதிப்பு: இது வயிறு மற்றும் குடல் பகுதியில் கடுமையான எரிச்சலையும் புண்களையும் உண்டாக்கும்.
சிறுநீரக செயலிழப்பு: இரத்தத்தில் கலக்கும் இந்த வேதிப்பொருள் சிறுநீரகங்களை மிக வேகமாகப் பாதிக்கும்.
நரம்பு மண்டலம்: அதிக அளவு உட்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் இவ்வாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.






