விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதையடுத்து 4 வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே எண்ட்ரி ஆனார்கள்.
இவர்களில் இறுதிப்போட்டிக்கு திவ்யா கணேஷ், சபரி, அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே தகுதி பெற்றனர். டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்த போட்டியாளரான கானா வினோத், பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சத்துடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ்-9 மோசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ஒவ்வொரு சீசன்களிலும் சந்தித்து வருகிறது. தற்போது பிக்பாஸ் சீசன்-9 பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சீசன்-9ல் பங்கேற்ற 20 போட்டியாளர்களும் அவ்வளவாக பிரபலம் இல்லாத போட்டியாளர்கள் தான். அவர்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதமும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றில் இந்த சீசனில் தான் விஜய் டிவியின் டி.ஆர்.பி ரெட்டிங் மிக குறைவாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

ரெட் கார்ட்:
பிக்பாஸில் டிக்கெட் டு ஃபினாலே ரவுண்டில், கார் டாஸ்க் நடந்தது. இதில் பார்வதியும் கம்ருதீனும் சேர்ந்து திட்டமிட்டு சக போட்டியாளர் சான்ட்ராவை கீழே தள்ளினர். இவர்கள் தள்ளியது கூட பிரச்சனையில்லை, ஆனால் சான்ட்ராவிற்கு Panic Attack வந்தது தெரிந்தும், அவருக்கு உதவாதது, அவரை பலவந்தமாக தள்ளியது ரசிரக்களையும் ஹவுஸ் மேட்ஸையும் கொந்தளிக்க செய்தது.

இதையடுத்து வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து ‘வெளிய போங்க’ என்று கூறிவிட்டார்.
இந்த சீசனில் பார்வையாளர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு, அதிக எதிர்ப்புகளை சம்பாதித்த போட்டியாளர் வி.ஜே. பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்
இந்த நான்கு பைனலிஸ்டுகளில் விக்ரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் அரோராவுக்கு கிடைத்திருக்கிறது. எஞ்சியுள்ள இருவரில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் திவ்யா கணேஷ். மேலும் இந்த சீசனில் இரண்டாவது இடம் சபரிக்கு கிடைத்துள்ளது.

இதன்மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வெல்லும் இரண்டாவது போட்டியாளராக திவ்யா உள்ளார். இதற்கு முன்னர் அர்ச்சனா 7வது சீசனில் டைட்டில் வென்றிருந்தார்.
அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண் போட்டியாளர் திவ்யா, இதற்கு முன்னர் ரித்விகா மற்றும் அர்ச்சனா கோப்பையை வென்றிருக்கிறார்கள்






