கந்தர்வக்கோட்டை  அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு, மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் வண்ண வண்ண கோலங்களை வரைந்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பொங்கல் விழா குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் முன் விளக்கி பேசினார்.