டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்தும், ஜனநாயகன் பட விவகாரம் குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தவெக கட்சி நிர்வாகி நிர்மல் குமார் விளக்கமளித்தார்.
கரூர் சம்பவம்
ரூரில் நடைபெற்ற தவகை கட்சியின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பல்வேறு தரப்பிலிருந்தும் தவெக கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் கண்டனங்கள் எழுந்தன. விஜய் தரப்பில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தோருக்கும் இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டது.
சிபிஐ விசாரணை
மற்றொரு புறம் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக, டெல்லி சிபிஏ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நேற்று ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதயடுத்து இன்று விஜய் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார். எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை. விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது. சி.பி.ஐ. விசாரணையில் தவெக தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர், என்றார்.
மேலும், “ஜனநாயகன்” பட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது என்றும் கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.






