விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக சார்பில் பிரமாண்டமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

“திராவிடப் பொங்கல் விழா”வினை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி திருவில்லிபுத்தூர் நகர் C.M.S மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இப்போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு நகர் திமுக செயலாளர் ஜி.ஜி. அய்யாவுப் பாண்டியனும், திமுக நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக் கண்ணன்,  திமுக ஒன்றிய செயலாளர் மல்லி கு.ஆறுமுகம் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கம் பணம் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும், “விளையாட்டு வீரர்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும்” என்று வாழ்த்தி வீரர்களை திமுக நிர்வாகிகள் கௌரவித்தனர்.

இவ்விழாவில் விருதுநகர் மாவட்டம் மற்றும் திருவில்லிப்புத்தூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.