தமிழர் திருநாளான தைப்­பொங்­கல் வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்­டா­டப்­ப­டவுள்ளநிலையில், திண்டுக்­கல் மாவட்­டம் கோபால்­ பட்டி அரு­கே­யுள்ள பாறைப்­பட்டியில் பொங்கல் பானை­கள் தயாரிக்கும் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

மண்பானைகளுக்கு குறையாத மவுசு!

இங்கு கால் படி, அரை படி, ஒரு படி, இரண்டு படி என பல்­வேறு அளவுகளில் பொங்­கல் பானை­கள் தயாரிக்­கப்­பட்டு, வண்ணம் பூசும் பணிகளும் நடை­பெற்று வருகின்­றன. இத்­தொ­ழி­லாளர்­கள் தயாரிக்­கும் பானை­கள் உடும­லைப்­பேட்டை, பொள்­ளாச்சி, பழனி, வடமதுரை உள்ளிட்ட பிற மாவட்­டங்­களுக்கு அனுப்பும் பணியில் மும்மு­ர­மாக உள்ளனர்.

 பானை தயாரிக்­கும் தொழிலாளர்களின் கோரிக்கை

அரசு சார்பில் வழங்கப்படும் பொங்­கல் பரிசுத் தொகுப்பில் (பச்­ச­ரிசி, வெல்­லம், கரும்பு போன்­ற­வற்றுடன்) மண்­பானை மற்றும் மண் அடுப்புக­ளை­யும் ரேஷன் கடை­கள் மூலம் பொதுமக்­க­ளுக்கு வழங்கவேண்டும் என்று மண் பானை தயாரிக்கும் தொழி­லாளர்­கள் தமிழக அர­சுக்கு கோ ரி க்கை விடுத்துள்­ள­னர்.

இது 4 தலைமு­றைகளாகத் தொடர்ந்து வரும் மண்­பாண்­டத் தொழிலை ஊக்குவிப்­ப­துடன், அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் என தெரிவித்­தனர்.