விருதுநகர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான “திராவிட கொண்டாட்டம்” என்ற பெயரில் திராவிட பொங்கல்  விழாவினை முன்னிட்டு தாயில்பட்டி என்னும் பகுதியில் மின்னளிக் கபடி போட்டி நடைபெற்றது.

பல்வேறு அணிகள் பங்கேற்பு

இந்த கபடிப் போட்டியில் விஜய கரிசல்குளம், சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார் பட்டி, கணஞ்சாம்பட்டி, நதிக்குடி,  கீழத்தாயில்பட்டி, பாலம்மாள் காலனி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியினை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் தொடங்கி வைத்தார். வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் நம்பிராஜன், திமுக ஒன்றிய துணைத் தலைவர் சந்தனம், திமுக மாவட்ட பிரதிநிதி பொன்ழகு, முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“நாக் அவுட்” முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தாயில்பட்டி என். ஆர். கிங்ஸ், மற்றும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் மோதினர்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள்

இதில், என்.ஆர். கிங்ஸ்  அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசினை பத்தாயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை பெற்றுக் கொண்டனர்.

2ஆம் இடம் பெற்ற அணியினருக்கு ரூபாய் 8000 மற்றும் கோப்பையும்; 3வது இடம் பிடித்த அணியினருக்கு ரூபாய் 6 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை; 4வது இடம் வந்த அணியினருக்கு ரூபாய் 4000 ரொக்க்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், திமுக கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்