September 10, 2026

அதிமுக – அன்புமணி தரப்பு பாமக கூட்டணி உறுதி : ராமதாஸ் தரப்பு பாமக அதிருப்தி

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக – அதிமுக கூட்டணி முடிவாகியுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்தது. அப்போது தந்தை ராமதாசும், மகன் அன்புமணியும் இணைந்திருந்தனர். தற்போது பாமக இரண்டாக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களில் போட்டியிட்ட நிலையில் தற்போது 17 இடங்களை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணியின் நிபந்தனை

ஆனால் அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும், ராமதாஸ் தரப்பை சேர்க்க கூடாது என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாமகவில் அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு என பிளவு ஏற்பட்டுள்ளதால் ஓட்டுகள் சிதறும் என்பதால் அன்புமணி கேட்கும் இடங்களை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. பாமக உடனான கூட்டணியை அரசியல் கட்சிகள் தங்கள் உடன் நடத்த வேண்டுமென ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி – அன்புமணி சந்திப்பு

இந்நிலையில் சென்னை கீரின் வேல்ஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். அங்கே அதிமுக நிர்வாகிகளுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் – எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒன்றாக கரம்கோர்ந்து அதிமுக – பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

குழப்பமான கூட்டணி:-

அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்புக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன, தந்தை ராமதாஸ் உடனான சண்டையில் பாமக நிர்வாகிகள் முழுவதுமாக யார் பக்கம் வருவார்கள்? என்ற குழப்பத்துடன் அதிமுக – அன்புமணி கூட்டணி அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

You may have missed