பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமையகத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அமைச்சர் சொன்ன நல்ல செய்தி :-

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் 14ஆம் தேதி வரை 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் 12,552, சிறப்பு பேருந்துகள் 21,535 என மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கும் வாகன ஓட்டிகள் சென்னையில் உள்ள ஈசிஆர், ஓஎம் ஆர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

பண்டிகை முடிந்து சென்னை திரும்ப தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் சேர்ந்து மொத்தம் 21,635 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதாவது,

  • ஜன.9-ல் 1,050 பேருந்துகள்,
  • 10-ல் 1,030 பேருந்துகள்,
  • 11-ல் 255 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜன 12-ல் 2,200 பேருந்துகள்,
  • ஜன.13-ல் 2,790 பேருந்துகள்,
  • ஜன.14-ல் 2,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆகையால், சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல விரும்புவோர் அரசு அறிவித்துள்ள போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதிக கட்டண வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்கவும், தமிழக அரசு புகார் எண்களையும் அறிவித்துள்ளது.