திருநெல்வேலி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 43 வயது மரம் வெட்டும் தொழிலாளிக்கு இரண்டு மனைவிகள்.

மக்களுக்கு தந்தை செய்த கொடுமை

முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா்.
இதில், 8 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துவந்த 13 வயது மூத்த மகளை, தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் அச்சிறுமி கர்ப்பமானதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரியவந்தது.

இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தந்தைக்கு தூக்குத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.