“வரும் சட்டமன்ற தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும், விஜயின் ஆசை நிறையாசையாகிவிடும்” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அறுசுவை கறி விருந்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்ற உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது. அதைதொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவு அருந்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பெருந்தலைவர் காமராஜரின் புகழை குறைப்பதற்காக சதி செயல் செய்துள்ள முக்தாருக்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது என்றும், முக்தாரை கண்டித்து வரும் 9ம் தேதி சாத்தூரில் நாடார் மஹாஜன சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு அதிமுக தார்மீக ஆதரவளிப்பதாக” தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

இபிஎஸ் – சினம் கொண்ட சிங்கம்
“பலமான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார், எங்கள் பக்கத்தில் வரக்கூடிய வாய்புள்ளவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவெக களத்திலேயே கிடையாது.
களத்தில் இருக்கக்கூடியது அதிமுகவும்; திமுகவும் தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதிமுக என்ற சினம் கொண்ட சிங்கமும், திமுக என்ற மதம் கொண்ட யானைத்தான் களத்தில் உள்ளது, திமுக என்ற மதம் கொண்ட யானையை சினம் கொண்ட சிங்கமாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்துவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. ஒரு கடையை திறந்து வைக்க வந்தால் கூட கூட்டம் கூடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், அதெல்லாம் ஓட்டாக மாறக்கூடிய வாய்ப்பே கிடையாது என்றும், விஜயின் ஆசை நிறைசையாகிவிடும் வரும் சட்டமன்ற தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்பிக்கும்” என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
எங்கும் செல்ல மாட்டார்கள்!
பொங்கலுக்குள் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவெகாவில் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவையும் எடப்பாடியாரையும் விட்டு ஒருவரும் சொல்லமாட்டார்கள் என்பது உறுதி “ என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.






