திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான எல்.கணேசன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், “மொழிப் போர் தளபதி” என அழைக்கப்படுபவர். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எல்.கணேசன் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்திருக்கிறார் . அவரை பற்றிய செய்திகளை சுருக்கமாக பார்ப்போம்.

“மொழிப் போர் தளபதி எல்.கணேசன்”
- தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், “மொழிப் போர் தளபதி” என அழைக்கப்படுபவர்.
- 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர் எல்.கணேசன்
- நாட்டின் டின் அவசரநிலையின்போது அவசரநிலை மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் எல்.கணேசன்
- எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் எல்.கணேசன் சட்டமன்றம், சட்ட மேலவை, மக்களவை, மாநிலங்களவை என 4 விதமான பதவிகளையும் வகித்தவர்.

- வைகோ மதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த எல்.கணேசன் அதன்பின் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
- இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும், மொழிப் போராட்டத்திலும் பங்கேற்றதை அடுத்து இவர் “மிசா” சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திமுக கட்சியில் பல மொழிப்போர் தியாகிகள் இருந்தாலும் அவர்களில் முக்கியமான நபராக எல். கணேசன் விளங்குகிறார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






