தற்போது சின்னத்திரையிலும் சரி; சினிமாவிலும் சரி இன்ஸ்டாகிராமில் நடனமாடி அல்லது கண்டெட் வீடியோ போடும் பெண்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மூத்த நடிகைகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சம்பாதிக்கும் இன்ஸ்டாகிராம் பெண்கள்

கொரோனா லாக் டவுன் காலத்தில் இன்ஸ்டாகிராம், யூடிப் பிரபலங்கள் என நிறைய பேர் வளர்ந்து விட்டார்கள். குறிப்பாக பெண்கள் நிறைய பேர் இன்ஸ்டாகிராமில் தங்கள் திறமை காட்டி வீடியோக்களை பதிவிட்டு ஆயிரக்கணக்கான.. இலட்சக்கணக்கான.. ஃபாலோயர்களை பெற்று விட்டார்கள். அதன் மூலம் புரொமோஷன், விளம்பரம் செய்து நன்றாக சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

தற்போது சீரியலில் நடிப்பதற்கு கூட நடிகைகளை இன்ஸ்டாகிராம், யூடியூப் பிரபலங்களை தான் தேர்வு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு சின்னத்திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஒரு சீரியலில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் எத்தனை லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளன என்பதும் ஆராயப்படுவதாக கூறப்படுகிறது.

 

கவர்ச்சி நடனம் – டபுள் மீனிங் வசனம்

தற்போது, திறமையான பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக நடனம் ஆடும் பெண்களுக்கு அதிக சம்பளத்துடன் வாய்ப்பு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. விதவிதமான ஆடைகளில் கவர்ச்சியாக நடனம் ஆடி, டபிள் மீனிங் வசனம் பேசி ஆபாசம் வீடியோ பதிவிடும் பெண்களுக்கும் சோஷியல் மீடியாக்களில் மவுஸ் அதிகம்! அதைவைத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை சுலபமாக பெற்று விடுகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பெண்களால், யூடிப் நடிகளைகளால் இத்தனை வருசம் சாதிக்க வேண்டும் என உழைத்து கொண்டு இருக்கும் எங்களுக்கு உரிய அங்கீகாரமும், உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்ற மூத்த நடிகைகள் குற்றச்சாட்டியுள்ளனர்.