திமுக தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற நான்கு மாதங்களே உள்ளன. அதற்கு வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு குழு அமைத்துள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை பெறும் விதமாக பிரத்யேக செயலியை திமுக உருவாக்கி உள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிசம்பர் 31) தொடங்கி வைக்கிறார்.