மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக, தமிழக பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை இன்று சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.
தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி
இந்நிலையில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



அவரைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வா.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி தெரிவித்தனர்.







