வெள்ளித்திரை எனப்படும் சினிமாவை பார்க்கும் ரசிகர்களை விட, சின்னத்திரை நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

ஓ.டி.டி-யின் ஆதிக்கம்

முன்பெல்லாம் சினிமா என்றால் தியேட்டர்கள் தான் என்று இருந்தது. இப்போது “அமேசன் பரேம், ஜியோ ஸ்டார்..” என நிறைய ஓ.டி.டி தளம் வந்துவிட்டது. நிறைய புது படங்கள் தியேட்டர்களில் வெளியானாலும், ஒருசில தினங்களில் ஓ.ஓ.டி-யில் வெளியிடப்படுகின்றன.

சில புது படங்கள நேரடியாக தியேட்டருக்கு செல்லாமல் ஓ.ஓ.டி-யில் வெளியாகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது ரசிகர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னவென்றால் பெரிய பட்ஜெட் படங்கள் நன்றாக இருப்பதில்லை ஏற்கனவே நடிகர்களும் அதிக தொகை சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் படத்தில் ஒன்றுமே்இல்லை என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரையை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளும், சீரிகளும் ஒரே மாதிரியாக தான் உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போ உள்ள பல டிவி சேனல்களில் சீரியல்கள் என்றால் ஒரே மாதிரியான கதையை தான் உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அதை விரும்பிப் பார்ப்பதற்கு தனிக்கூட்டமும் தமிழ்நாட்டில் உண்டு.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும், சீரியகளையும் மக்கள் அத்திக்களவில் விரும்பி பார்த்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

சின்னத்திரைக்கு வர வாய்பபு

விரைவில் பெரிய தயாரிப்பாளர்களும், சினிமாவில் தோல்வியடைந்த நடிகர்கள், இயக்குநர்களும் கூட சின்னத்திரைக்கு வருவார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது கவனிக்கத்தக்கது.